உள்ளூர் செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் 3 பெண் பயணிகளிடம் ரூ.53 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Published On 2023-01-17 15:39 IST   |   Update On 2023-01-17 15:39:00 IST
  • ஒரு பெண் பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
  • மொத்தம் 3 பெண் பயணிகளிடம் இருந்து ரூ.53 லட்சம் மதிப்புள்ள 1029 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆலந்தூர்:

பாங்காக்கில் இருந்து சென்னை விமான நிலையத்தக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண் பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து 192 கிராம் தங்கம் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் இலங்கையின் கொழும்புவில் இருந்து சென்னைக்கு வந்த இரண்டு வெவ்வேறு விமானங்களில் பயணம் செய்த 2 பெண் பயணிகளிடம் இருந்து 837 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மொத்தம் 3 பெண் பயணிகளிடம் இருந்து ரூ.53 லட்சம் மதிப்புள்ள 1029 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் கடத்தல் தொடர்பாக 3 பெண் பயணிகளிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News