உள்ளூர் செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் 500 பேருக்கு அன்னதான திட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்த காட்சி.

முக்கிய திருவிழா நாட்களில் நெல்லையப்பர் கோவிலில் 500 பேருக்கு அன்னதானம்-சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்

Published On 2022-07-03 09:53 GMT   |   Update On 2022-07-03 09:53 GMT
  • நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • கோவிலில் நாள்தோறும் 1100 பேர் பயனடைந்து வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி முக்கிய திருவிழா நாட்களில் நாள் ஒன்றுக்கு 500 பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை சபாநாயகர் அப்பாவு இன்று தொடங்கி வைத்தார்.

500 பேருக்கு அன்னதானம்

கடந்த 2002-ம் ஆண்டு முதல் நெல்லையப்பர் கோவிலில் அன்னதான திட்டம் தொடங்கப்பட்டு தினமும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது அன்னதான திட்டத்தை விரிவுப்படுத்தி முக்கிய திருவிழா நாட்களில் தினமும் 500 பேருக்கு அன்னதானம் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி இன்று சபாநாயகர் அப்பாவு ஆயிரங்கால் மண்டபத்தில் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 20 கோவில்களில் இந்த அன்னதான திட்டம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் நாள்தோறும் 1100 பேர் பயனடைந்து வருகின்றனர்.

இன்று நடந்த அன்னதான திட்டம் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெயஸ்ரீ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, நெல்லை தாசில்தார் சண்முக சுப்பிரமணியன், நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி, முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, தச்சை பகுதி செயலாளர் சுப்பிரமணியன், பரமசிவ அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News