உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் சொத்துவரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை

Published On 2023-10-05 12:14 IST   |   Update On 2023-10-05 12:14:00 IST
  • நகராட்சியில் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி செய்து ஊக்கத்தொகை வழங்கப்படும்.
  • ஒட்டன்சத்திரம் நகராட்சி பணியாளர்களிடமோ அல்லது நகராட்சி அலுவலகத்தில் நேரடியாக செலுத்தலாம்.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் படி 2 ஆண்டு அரையாண்டுக்கான அக்டோபர் 2020 முதல் மார்ச் 2024 வரை சொத்து வரியை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் செலுத்தினால் நிகர சொத்து வரியில் 5 சதவீதம் தள்ளுபடி செய்து ஊக்கத்தொகை வழங்கப்படும்.

மேலும் 2023 மற்றும் 2024 முதல் அரையாண்டு ஏப்ரல் 2003 முதல் செப்டம்பர் 2021 வரை சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு கடந்த 1ம் தேதி முதல் ஒரு சதவீதம் வசூல் செய்யப்படும் வரிகளை தங்கள் இல்லம் தேடி வருகை தரும் நகராட்சி பணியாளர்களிடமோ அல்லது நகராட்சி அலுவலகத்தில் நேரடியாக செலுத்தலாம்

எனவும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குறிப்பிட்ட காலத்துக்குள் சொத்து வரிகளை செலுத்தி ஊக்கத்தொகை பெற்றுக் கொள்ளுமாறு ஆணையாளர் மீனா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News