உள்ளூர் செய்திகள்

 பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்களுடன் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம், ஆய்வாளர் விமலா ஆகியோர் உள்ளனர்.

சிதம்பரத்தில் அதிக கட்டணம் வசூலித்த 5 ஆட்டோக்கள் பறிமுதல்

Published On 2022-09-17 12:23 IST   |   Update On 2022-09-17 12:23:00 IST
  • சிதம்பரத்தில் அதிக கட்டணம் வசூலித்த 5 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
  • பயணிகளிடம் அடாவடியாக வசூல் செய்வதை ஆட்டோ டிரைவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கடலூர்:

சிதம்பரம் ரெயில் நிலையத்திலிருந்து பஸ்நிலையத்துக்கு பயணிகளிடம் அதிகமான வாடகை வசூல் செய்வதாக புகார் வந்தது. இதனை தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் 5 ஆட்டோ வாகனங்கள் அதிகமாக வசூல் செய்ததற்காகவும், தகுதி சான்று, ஓட்டுனர் உரிமம், காப்புச் சான்று இல்லாமல் வாகனத்தை இயக்கியதற்காகவும் அதனை பறிமுதல் செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் மேல் நடவடிக்கைக்காக நிறுத்தினார். இனிவரும் காலங்களில் கோவில் நகரமான சிதம்பரத்துக்கு வருகை தரும் பயணிகளிடம் அடாவடியாக வசூல் செய்வதை ஆட்டோ டிரைவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் இச்சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News