உள்ளூர் செய்திகள்

சாலை விபத்து

கடலூர் அருகே சோகம் - லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலி

Published On 2023-01-03 05:38 IST   |   Update On 2023-01-03 05:44:00 IST
  • வேப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்துகளும், லாரிகளும் மோதியது.
  • இந்த கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.

கடலூர்:

கடலூர் அருகே வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 2 தனியார் பேருந்துகள், 2 லாரிகள் ஒரு கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் காரில் சென்ற 2 பெண்கள், 2 சிறார்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

காரில் சிக்கிய உடல்களை நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு படையினர் மீட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News