உள்ளூர் செய்திகள்
குன்னூரில் நடந்த ஜமாபந்தியில் 401 மனுக்கள் பெறப்பட்டன
- குன்னூர் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 28-ந் தேதி முதல் நேற்று வரை என 3 நாட்கள் ஜமாபந்தி முகாம் நடந்தது.
- பொதுமக்களிடமிருந்து 401 மனுக்கள் பெறப்பட்டு, இதில் 49 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூர் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 28-ந் தேதி முதல் நேற்று வரை என 3 நாட்கள் நடந்த ஜமாபந்தி முகாமில் குன்னூர் தாலுக்காவில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மக்கள் பட்டா பெயர் மாற்றம், குடும்ப அட்டையில் பெயர் திருத்தம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அளித்திருந்தனர்.
அதன்படி, நேற்று வரையில் பொதுமக்களிடமிருந்து 401 மனுக்கள் பெறப்பட்டன. இதில், மனுக்களில் 49 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட வருவாய்துறை அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, வட்டாச்சியர் சிவக்குமார் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.