உள்ளூர் செய்திகள்

கைதான 4 வாலிபர்களையும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களையும் படத்தில் காணலாம்.


தென்காசியில் கஞ்சா பொட்டலங்களுடன் 4 வாலிபர்கள் கைது

Published On 2023-01-20 13:50 IST   |   Update On 2023-01-20 13:50:00 IST
  • புதிய பஸ் நிலையம் பகுதியில் 4 பேர் கஞ்சாவை சிறு சிறு பொட்டலங்களாக விற்றது தெரிய வந்தது.
  • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போலீசார் 750 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தென்காசி:

தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தென்காசி போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தென்காசி புதிய பஸ் நிலையம் பகுதியில் சுற்றி திரிந்த பொத்தை பகுதியை சேர்ந்த கண்ணன், இலஞ்சியை சேர்ந்த கணேசன், காசிமேஜர்புரம் பகுதியை சேர்ந்த ஞானகுரு, கணேசன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தியதில் இவர்கள் 4 பேரும் கஞ்சாவை சிறு சிறு பொட்டலங்களாக விற்றது தெரிய வந்தது.

உடனடியாக போலீசார் அவர்களை கைது செய்து கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 2 ஆட்டோ, ஒரு இரு சக்கர வாகனம், 4 செல்போன் மற்றும் 750 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களுக்கு கஞ்சா வழங்கியவர்கள் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News