உள்ளூர் செய்திகள்

இரும்பு திருடியதை தட்டிக்கேட்ட வடமாநில தொழிலாளர்களை தாங்கிய 4 வாலிபர்கள் கைது

Published On 2023-02-27 10:15 GMT   |   Update On 2023-02-27 10:15 GMT
  • மேல்அழிஞ்சிப்பட்டு பகுதியில் நின்ற கொண்டிருந்த 3வாலிபர்களை பார்த்து, ஷாம் கோஷ் (வயது 37) ஏன் இங்கு நிற்கிறீர்கள் என கேட்டுள்ளார்.
  • 3பேரும் சேர்ந்து கையில் வைத்திருந்த இரும்பு ராடால் ஷாம் கோஷை தாக்கினார்கள்.

கடலூர்:

கடலூர் அடுத்த மேல்அழிஞ்சிப்பட்டு பகுதியில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்ற வருகின்றது. அங்கு 3 நபர்கள் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த அங்கு வேலை செய்து கொண்டிருந்த மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்து ஷாம் கோஷ் (வயது 37) ஏன் இங்கு நிற்கிறீர்கள் என கேட்டுள்ளார்  .அப்போது அங்கு இருந்த 3 நபர்களும், நாங்கள் இரும்பு திருடுவதை நீ மொபைல் போனில் போட்டோ எடுக்கின்றாயா என கேட்டு, கையில் வைத்திருந்த இரும்பு ராடால் ஷாம் கோஷை தாக்கினார்கள்   ஷாம் கோஷ்யுடன் இருந்த 2 பணியாளர்கள், 3 பேரை தடுக்க முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த 3 நபர்களில் ஒருவர், அவரது நண்பர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். இதையடுத்து மேலும், 3 நபர்கள் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு வந்தனர். இவர்கள் 6 பேரும் சேர்ந்து 3 தொழிலாளர்களை சரமாரியாக தாக்கினார்கள்  இதில் ஷாம் கோஷை தாக்கி கொலைமுயற்சியில் ஈடுபட்டதாகவும், மற்ற நபர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. பலத்த காயம் அடைந்த ஷாம் கோஷ், சதன் கோஷ், பிஸ்வாஜ்பால் ஆகிய 3 பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து கடலூர் புதுக்கடை காலனியை சேர்ந்தவர்கள் சிந்தனைச்செல்வன் (வயது 23), சதீஷ்குமார் (21), தர்மராஜ் (28), மணிகண்டன் (27) ஆகிய 4 வாலிபர்களை கைது செய்தனர். மேலும், ஒரு சிலர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News