உள்ளூர் செய்திகள்

தியாகதுருகம் அருகே வரஞ்சரம் ஊராட்சியில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய கடைகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா சுகுமார் அபராதம் விதித்தார்.

வரஞ்சரம் ஊராட்சியில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய 4 கடைகளுக்கு அபராதம்:பெண் ஊராட்சி மன்ற தலைவர் அதிரடி

Published On 2023-03-03 08:54 GMT   |   Update On 2023-03-03 09:49 GMT
  • ஊராட்சி மன்ற தலைவராக சுஜாதா சுகுமார், நேற்று அதே பகுதியில் உள்ள மளிகை கடை, டீக்கடை, உணவகம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
  • தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த அவர் கடைகளுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தார்

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வரஞ்சரம் ஊராட்சி மன்ற தலைவராக சுஜாதா சுகுமார் உள்ளார். இவர் நேற்று அதே பகுதியில் உள்ள மளிகை கடை, டீக்கடை, உணவகம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை 4 கடைகளில் பயன்படுத்தியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த அவர் கடைகளுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தார்.

அதன்படி கடைகாரர்களிடமிருந்து ரூ.800 வசூல் செய்ய ப்பட்டது. தொடர்ந்து கிராமப் பகுதிகளில் எளிதில் கிடைக்கும் வாழை இலைகளை டீக்கடை மற்றும் உணவகங்களில் பயன்படுத்த வேண்டும் எனவும், மளிகை கடைக்கு வரும் பொதுமக்களிடம் மஞ்சப்பை எடுத்துவர சொல்ல வேண்டும் எனவும் கடை உரிமையாள ர்களிடம் அறிவுறுத்தினார்   மேலும் வரும் காலங்களில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இவ்வாறு கடைகளை ஆய்வு செய்து அதிரடியாக அபராதம் விதித்த பெண் ஊராட்சி மன்ற தலைவரை பொதுமக்கள் பலரும் வெகுவாக பாராட்டினர். அப்போது ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செந்தில், ஊராட்சி செயலாளர் ரமேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News