- மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
- 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்.
நாகப்பட்டினம்:
திருமருகல் அருகே சேஷமூலை பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வேகமாக 2 மோட்டார் சைக்கிள்களை சந்தேகத்தின்பேரில் மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.
சோதனையில் மோட்டார் சைக்கிள்களில் இருந்த மூட்டையில் 110 லிட்டர் சாராயம் இருந்தது.
இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் காரைக்கால் மாவட்டம் மானம்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த செல்வம் (வயது 43), அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 38) என்பதும் இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் கீழ்வேளூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து அவரிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் இடையாத்தாங்குடி பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சாராயம் கடத்திய தேவூர் ராணி அய்யர் தெருவை சேர்ந்த சக்திவேல் (வயது 41), திருச்செங்காட்டங்குடி வடக்குதெருவை சேர்ந்த சுபாஷ் (வயது 22) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இவர்கள் கீழ்வேளூர் பகுதிக்கு மோட்டார் சைக்கிள்களில் சாராயம் கடத்தி சென்றதும் தெரியவந்தது.