உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டிகள்.

விருத்தாசலத்தில் மணல் கடத்திய 4 பேருக்கு அபராதம்

Published On 2023-10-07 09:02 GMT   |   Update On 2023-10-07 09:02 GMT
  • நவநீதகிருஷ்ணன், அமுதபிரியன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
  • அரசு அனுமதி இல்லாமல் மணல் எடுத்து செல்வது உறுதி செய்யப்பட்டது.

கடலூர்:

விருத்தாசலம் அடுத்த சத்தியவாடி காப்பு காட்டில், வனச்சரக அலுவலர் ரகுவரன், வனவர் சிவகு மார், பன்னீர்செ ல்வம்வ னக்காப்பாளர்கள் நவநீதகி ருஷ்ணன், அமுதபிரியன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வண்ணா ன்குடிகாடு கிராமத்தை சேர்ந்த சக்திவேல், சின்ராசு, வேலாயுதம் மற்றும் ஒலையூர் கிராமத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி ஆகியோர் மோசட்டை சுடுகாடு அருகே அரசு அனுமதி இல்லாமல் மாட்டு வண்டியில் திருட்டு த்தனமாக மணலை எடுத்து சென்று கொண்டிருந்தனர்.

அவர்களை வனச்சரக அலுவலர் ரகுவரன் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்ட போது, அரசு அனுமதி இல்லாமல் மணல் எடுத்து செல்வது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மாட்டு வண்டி உரிமையாளர்கள் 4 பேர் மீதும்தமிழ்நாடு வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலா 20 ஆயிரம் வீதம் வண்டிகளுக்கு 80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News