உள்ளூர் செய்திகள்

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதி

Published On 2022-12-16 14:34 IST   |   Update On 2022-12-16 14:34:00 IST
  • ஆணிக்கல் மாரியம்மன் கோவிலுக்கு கடந்த 12-ந் தேதி சுவாமி தரிசனம் செய்ய சென்றனா்.
  • காட்டாற்று வெள்ளத்தில் 4 பேரும் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனா்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம், ஊட்டி கவரட்டி ஜெக்கலொரை கிராமத்தைச் சோ்ந்த விமலா (35), சுசீலா (56), வாசுகி (45), சரோஜா (65) ஆகியோா் சீகூா் ஆனைகட்டி அருகே உள்ள ஆணிக்கல் மாரியம்மன் கோவிலுக்கு கடந்த 12-ந் தேதி சுவாமி தரிசனம் செய்ய சென்றனா். தரிசனம் முடிந்து மாலை கெதறல்லா ஆற்றின் தரைப்பாலம் வழியாக ஊருக்கு திரும்பி வந்தபொழுது, திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் 4 பேரும் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனா். இதையடுத்து, உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீலகிரி ஆ.ராசா எம்.பி, சுற்றுலாத்துறை அமைச்சா் ராமசந்திரன் ஆகியோா் ஜெக்கலொரை கிராமத்துக்கு நேரில் சென்று தமிழக அரசு அறிவித்த ரூ.4 லட்சம் மற்றும் தி.மு.க சாா்பில் ரூ.1 லட்சத்தை 4 பேரின் குடும்பங்களுக்கு வழங்கி ஆறுதல் கூறினாா். இதில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், தி.மு.க மாவட்டச் செயலாளா் பா.மு.முபாரக் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.

Tags:    

Similar News