உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி நாளந்தா கல்விக் குழுமத்தின் 30-ம் ஆண்டு நிறைவு விழா

Published On 2023-04-28 15:02 IST   |   Update On 2023-04-28 15:02:00 IST
  • அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
  • பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் நாளந்தா கல்விக் குழுமத்தின் 30-ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது.

இரண்டு நாட்கள் நடந்த இந்த விழாவின் முதல் நாளில் சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன், நடிகர் பரத், இயற்கை விவசாயிகள் பாண்டிச்சேரி கிருஷ்ணா மெக்கன்சி, நந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டு, பள்ளியின் இலச்சினையை வெளியிட்டு விழாவினை சிறப்பித்தனர்.

இரண்டாம் நாளில் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுபெற்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலியமூர்த்தி, ஐ.ஆர்.ஏ.எஸ் பிரேமா, ஈரோடு மகேஷ், மிர்ச்சி விஜய் ஆகியோர் கலந்துகொண்டு, முன்னாள் மாணவர் அமைப்பினை தொடங்கி வைத்து, முத்து விழாச் சிறப்பிதழை வெளியிட்டு விழாவினை சிறப்பித்தனர். இரண்டு நாட்களும் மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்

நடந்தது. மேலும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் நிறுவனர் ஆடிட்டர் கொங்கரசன், தாளாளர்

சாமுண்டீஸ்வரி, பள்ளியின் இயக்குநர்கள் கவுதமன், டாக்டர்.புவியரசன் மற்றும் பள்ளியின் முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பிற பணியாளர்கள் செய்திருந்தனர். 

Tags:    

Similar News