உள்ளூர் செய்திகள்

வாலிபரிடம் செயின், பணம் பறித்த 3 ரவுடிகள் கைது

Published On 2022-07-28 14:46 IST   |   Update On 2022-07-28 14:46:00 IST
  • வேலை விஷயமாக மணியனூர் சந்தை அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
  • கத்தியை காட்டி மிரட்டி, தாக்கி அவரிடமிருந்து 2 பவுன் செயின், அரை பவுன் மோதிரம், ரூ.2600 பணம், ரூ.2000 மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

அன்னதானப்பட்டி:

சேலம் குகை வசந்தம் நகர், ஆண்டிப்பட்டி ஏரி ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் மருதுபாண்டி (வயது 29). பெயிண்டிங் காண்டிராக்டர் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 24- ந் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒரு வேலை விஷயமாக மணியனூர் சந்தை அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில நபர்கள் மருதுபாண்டியை திடீரென வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, தாக்கி அவரிடமிருந்து 2 பவுன் செயின், அரை பவுன் மோதிரம், ரூ.2600 பணம், ரூ.2000 மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி காலனி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடிகள் சாரதி (25), பாலு என்கிற பாலமுருகன் (36), காதர் உசேன் (29) ஆகிய 3 பேரையும் நேற்று புதன்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து செயின், மோதிரம், செல்போன், பணம் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News