உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

ஒட்டன்சத்திரம் அருகே 200 கிலோ குட்கா, 1392 மது பாட்டில்களுடன் 3 பேர் கைது

Published On 2022-09-20 04:58 GMT   |   Update On 2022-09-20 04:58 GMT
  • ஒட்டன்சத்திரம் பகுதியில் புகையிலை பொருட்கள் மற்றும் போலி மதுபானங்கள் விற்பதாக மாவட்ட எஸ்.பி. பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 474 மதிப்பிலான 196 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் பகுதியில் புகையிலை பொருட்கள் மற்றும் போலி மதுபானங்கள் விற்பதாக மாவட்ட எஸ்.பி. பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில் டி.எஸ்.பி.முருகேசன் ஆலோசனை யின்படி இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணக்குமார், இளஞ்செழியன் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் சோதனை நடத்தி வந்தனர்.

ஏ.பி.பி. நகரை சேர்ந்த குப்புசாமி (வயது50) வீட்டில் ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 474 மதிப்பிலான 196 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதனை சப்ளை செய்த ஒட்டன்சத்திரம் சாலைப்புதூரை சேர்ந்த மோசஸ்பெனினா (42), திண்டுக்கல் மேட்டுப்பட்டி அன்னைநகரை சேர்ந்த சையது முகமது (28) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து 1392 போலி மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். தலைமறைவான முகமது அலி உள்பட 2 பேரை தேடி வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட எஸ்.பி. தெரிவிக்கையில், கள்ள சந்தையில் மதுபானம் விற்பவர்கள் மீதும் இதற்கு துைண போகும் நபர்கள்மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News