உள்ளூர் செய்திகள்

நாங்குநேரி அருகே மணல் திருட்டு வழக்கில் 3 பேர் கைது

Published On 2022-06-06 09:24 GMT   |   Update On 2022-06-06 09:24 GMT
  • மணிமுத்தாறு கால்வாய் அருகே சிலர் 3 லாரிகளில் எம்.சாண்ட் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர்.
  • எம்.சான்ட் குவாரியில் இருந்து பாஸ் இல்லாமல் மணல் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே வடக்கு விஜயநாராயணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தவசிலிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

சவளைக்காரன்குளம் சாலையில் மணிமுத்தாறு கால்வாய் அருகே சென்றபோது சிலர் 3 லாரிகளில் எம்.சாண்ட் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓட முயன்றனர்.

அவர்களை மடக்கி பிடித்து நடத்திய விசாரணையில், சவளைகாரன்குளத்தை சேர்ந்த ஆறுமுகநயினார்(33), வடக்கு விஜயநாராயணம் பகுதியை சேர்ந்த மாடசாமி(37), சண்முக சுந்தரம்(36) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். நாங்குநேரி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் நாங்குநேரி அருகே உள்ள இலங்குளத்தை சேர்ந்த இஸ்ரவேல் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான எம்.சான்ட் குவாரியில் இருந்து பாஸ் இல்லாமல் மணல் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் இஸ்ரவேல் பிரபாகரனையும் வழக்கில் சேர்த்தனர். இதனையறிந்த அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

தலைமறைவான இஸ்ரவேல் பிரபாகரன் தி.மு.க.வை சேர்ந்தவர். அவர் தற்போது இலங்குளம் பஞ்சாயத்து தலைவராக உள்ளார்.

Tags:    

Similar News