உள்ளூர் செய்திகள்
- நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.
- 4-ந் தேதி ஏற்பட்ட பிரச்சினையில் ராஜேஸ்வரியை சின்னசாமி தரப்பினர் தாக்கினார்கள்.
மத்தூர்,
போச்சம்பள்ளி அருகே உள்ள சின்ன பாலேதோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 40). அதே பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (52) உறவினர்கள். இவர்களின் நிலம் அருகருகில் உள்ளது. இவர்களுக்குள் நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி ஏற்பட்ட பிரச்சினையில் ராஜேஸ்வரியை சின்னசாமி தரப்பினர் தாக்கினார்கள். இதில் காயம் அடைந்த ராஜேஸ்வரி இது குறித்து போச்சம்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சின்னசாமி, செல்வி (35), பரமேஸ்வரி (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.