உள்ளூர் செய்திகள்

ரூ.3 லட்சம் கடனுக்கு ரூ. 2 கோடி நிலம் அபகரிப்பு 3 lakh for a loan of Rs. 2 crore land grab

Published On 2022-12-06 08:59 GMT   |   Update On 2022-12-06 08:59 GMT
  • முதலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி, வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.
  • ரூ.3 லட்சம் கடனாகப் பெற்றார். அந்த கடனுக்காக கோபிநாத் அசலுடன் வட்டியும் சேர்த்து மாதம் மாதம் கொடுத்து வந்துள்ளார்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் சின்ன முதலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி . வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். அவரிடம் கோழித் தீவன மூலப் பொருள் வியாபாரம் செய்து வரும் கோபிநாத் என்பவர் கடந்த 2011-ம்

வருடம் வியாபார அபிவிருத்திக்காக ரூ.3 லட்சம் கடனாகப் பெற்றார். அந்த கடனுக்காக கோபிநாத் அசலுடன் வட்டியும் சேர்த்து மாதம் மாதம் கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் 2 லட்சம் ரூபாய் கடன் பாக்கி இருக்கும்

நிலையில் துரைசாமி, கோபி நாத்திடம், 'உடனடியாக பணத்தை கொடு, அவ்வாறு பணத்தை கட்டவில்லை என்றால், மாதம் 2 லட்சம் டபுளிங் வட்டி" என்று மிரட்டி மாதா மாதம் 2 லடசம் பெற்று வந்துள்ளார். மேலும் 'இதை வெளியில் சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன்" என்றும் மிரட்டி வந்துள்ளார்.

இதனால் கோபிநாத் மன நிலை பாதிப்பு அடைந்து விட்டார். கோபிநாத் கடனுக்காக துரைசாமி யிடம் பிணை யமாக கொடுத்த சொத்து பத்தி ரங்க ளையும் துரைசாமி அவரை கடத்திச் சென்று, கொலை மிரட்டல் விடுத்து, வெற்று பத்தி ரங்களிலும், வெற்று பேப்பர்க ளிலும் கையெழு த்துக்களையும் பெற்று இருக்கிறார்.

கோபிநாத் சொத்துக்க ளையும் துரைசாமி, அவரது பெய ருக்கு கடந்த 2017-ம் வருடம் மாற்றிக் கொண்டுள்ளார். கடந்த 2020-ம் வருடம் கோபிநாத், துரைசாமியிடம் 'பணம் முழுவதையும் பெற்று க்கொண்டுவிட்டீரே எனது சொத்து ஆவணங்களை யும், நான் கொடுத்த வங்கி காசோலைகளையும் எனக்கு கொடுங்கள்" என்று கேட்டுள்ளார்.

அப்போது துரைசாமி, கோபிநாத் சொத்துக்களை மோசடி செய்து அவரது பெயருக்கு மாற்றிக்கொண்டுள்ளது தெரியவந்தது ‌‌. இந்த விவரம் தெரிந்த கோபிநாத் காவல் நிலையத்தில் துரைசாமி மீது மோசடி புகார் கொடுத்தார். இதுபற்றிய விவரம் தெரிந்த துரைசாமி, உடனடியாக கோபிநாத்திடம் ஏமாற்றி மிரட்டி பிணையமாக பெற்ற காசோலைகளில் ஒரு காசோலையை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துவிட்டார். மேலும் பல காசோலைகளை வைத்து கோபிநாத்தின் மீது அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கு போடுவதாக கோபிநாத்தை துரைசாமி மிரட்டியுள்ளார். மேலும் அவர் ஏற்கனவே ரேசன் அரிசி கடத்தி குண்டர் சட்டத்தில் கைதாகி, சிறை சென்று ஜாமீனில் வெளியில் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கந்து வட்டி கொடுமையின் மூலம் பாதிப்பு அடைந்த கோபிநாத் இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் தனது சொத்துக்களையும், தான் கையெழுத்து போட்டுக் கொடுத்த வெற்று பத்திரங்கள், வெற்று பேப்பர்கள், தனது வங்கி காசோலைகள் போன்ற ஆவணங்களையும் துரைசாமியிடமிருந்து மீட்டுத் தரவேண்டி புகார் மனு அளித்துள்ளார். குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது நாமக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News