உள்ளூர் செய்திகள்

விபத்தில் சிக்கிய கார்

இ.சி.ஆரில் கார் மீது அரசு பேருந்து மோதல் - அதிர்ஷ்டவசமாக 3 பேர் உயிர் தப்பினர்

Published On 2023-01-22 00:13 IST   |   Update On 2023-01-22 00:13:00 IST
  • சதுரங்கபட்டினம் காவல் நிலையம் அருகே பின்னால் வந்த அரசு பேருந்து ஒன்று திடீரென காரின் மீது மோதியது.
  • காரை ஓட்டிய கிருஷ்ணன் சாதுர்யமாக காரை நிறுத்தியதால் 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் இருந்து கல்பாக்கம் நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் மாருதி கார் ஒன்று 3 பேருடன் சென்று கொண்டிருந்தது. அப்போது சதுரங்கபட்டினம் காவல் நிலையம் அருகே பின்னால் வந்த அரசு பேருந்து ஒன்று திடீரென காரின் பின்புறம் மோதியது.

இதில் கார் நிலைகுலைந்து ஓடியது. காரை ஓட்டிய கிருஷ்ணன் சாதுர்யமாக விபத்து ஏற்படாமல் காரை நிறுத்தினார். இதனால் காரில் பயணித்த 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அதன்பின் அரசு பஸ்ஸை நிறுத்தி மோதியது எப்படி என காரணம் கேட்டதற்கு, அரசு பேருந்து டிரைவர் பிரேக் பெயிலியர் என பொறுப்பின்றி பதிலளித்தார். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கும் நிலை ஏற்பட்டது.

தகவலறிந்த சதுரங்கபட்டினம் போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News