உள்ளூர் செய்திகள்

3 நாட்கள் தொடர் விடுமுறைசேலத்தில்இருந்து 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்

Published On 2023-04-29 13:01 IST   |   Update On 2023-04-29 13:01:00 IST
  • பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
  • முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

சேலம்:

பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்துடன் அரசு ஊழியர்களுக்கும் இன்று, நாளை மற்றும் 1-ந் தேதி மே தினம் என தொடர்ந்து 3 நாட்கள் விடு முறை வருவதால் நகர்புறங்க ளில் வசிப்பவர் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

இதனால் சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன் பேரில் சேலம் அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் சேலம் மற்றும் தர்மபுரியில் இருந்து சென்னை, பெங்க ளூர், கோவை, மதுரை, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு 40 சிறப்பு பாஸ்கள் இயக்கபட்டன. இதேபோல கோவை, மதுரை, திருச்சி, பெங்களூர் உள்ளிட்ட ஊர்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கினர். கோடை விடுமுறைக்காகவும் முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News