உள்ளூர் செய்திகள்

இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் கார்மேகம் வெளியிட்ட காட்சி.

சேலம் மாவட்டத்தில் 29.60 லட்சம் வாக்காளர்கள்

Published On 2023-01-05 07:48 GMT   |   Update On 2023-01-05 07:48 GMT
  • சேலம் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023, இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டருமான கார்மேகம் இன்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வெளியிட்டார்.
  • மேலும் www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும், Voter Helpline App என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023, இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டருமான கார்மேகம் இன்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வெளியிட்டார். பின்னர், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் அவர் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து 1.1.2023-ந் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி டிசம்பர் 8-ந்தேதி வரை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து அனைத்து வாக்குப் பதிவு மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு படிவங்கள் பெறப்பட்டன.அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான கார்மேகம் வெளியிட்டார். இதில் மாவட்டம் முழுவதும் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் ஆண்கள் 14,73,024 பேரும், பெண்கள் 14,87,294 பேரும், இதரர் 275 பேரும் என மொத்தம் 29 லட்சத்து 60 ஆயிரத்து 593 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதை தொடர்ந்து கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-

வரைவு வாக்காளர் பட்டியலில் சேலம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 53,370 வாக்காளர்களின் பெயர் சேர்க்கப்பட்டும், 67,027 வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டும், இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 18-19 வயதுக்குட்பட்ட புதிய வாக்காளர்கள் 45,880 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்ச்சியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப் பதிவு மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலங்களில் விண்ணப்பப்படி வங்களைப் பெற்று, பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும், Voter Helpline App என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, சேலம் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) எம்.ஜி.சரவணன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News