உள்ளூர் செய்திகள்

விழாவில் ஆறுமுகநேரி பேரூராட்சி துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், நகர தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேசனுக்கு பரிசு வழங்கிய போது எடுத்த படம். அருகில் நகர செயலாளர் நவநீத பாண்டியன் உள்ளார்.

ஆறுமுகநேரியில் தி.மு.க.வில் அதிக உறுப்பினர்களை சேர்த்த 26 பேருக்கு தங்க,வெள்ளி காசு பரிசளிப்பு

Published On 2023-08-04 08:44 GMT   |   Update On 2023-08-04 08:44 GMT
  • ஆறுமுகநேரியில் நகர தி.மு.க. செயலாளரின் அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
  • புதிய உறுப்பினர்களை சேர்த்தவர்களை பாராட்டி தங்க காசுகள் மற்றும் வெள்ளி காசுகள் வழங்கப்பட்டது.

ஆறுமுகநேரி:

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சியில் தி.மு.க.வை சேர்ந்த கலாவதி கல்யாண சுந்தரம் தலைவராகவும், கல்யாணசுந்தரம் துணைத் தலைவராகவும் செயல்பட்டு வருகின்றனர்.

தங்க காசுகள்

இவர்கள் கடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்ற போது அனைத்து வார்டு கவுன்சிலர்களுக்கும் தங்களின் சொந்த செலவில் இருசக்கர வாகனம் வழங்கினர். இது மாநில அளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் தற்போது முன்னாள் முதல் -அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க. வில் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. இதன்படி ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதியில் அதிக உறுப்பி னர்களை சேர்த்த தி.மு.க .வை சேர்ந்த 6 பேருக்கு தங்க காசுகளையும், 20 பேருக்கு வெள்ளி காசுகளையும் நகர தி.மு.க. செய லாளர் நவநீத பாண்டியன் வழங்கி உள்ளார்.

அலுவலகம் திறப்பு

ஆறுமுகநேரியில் நகர தி.மு.க. செயலாளரின் அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நகரச் செயலாளர் நவநீத பாண்டி யன் தலைமை தாங்கினார். நகர இளைஞரணி அமைப் பாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட பிரதிநிதி ராதா கிருஷ்ணன் வரவேற்று பேசினார். பேரூராட்சி துணைத் தலைவர் கல்யாண சுந்தரம் அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்பு ரையாற்றினார்.

தொடர்ந்து அவர் கட்சிக்கு அதிகப்படியான புதிய உறுப்பினர்களை சேர்த்தவர்களை பாராட்டி தங்க காசுகள் மற்றும் வெள்ளி காசுகளை வழங்கி னார். அதன்படி ஜான் பாஸ்கர், சரவண வெங்க டேஷ், மகேஷ், செல்வம், ஜெயக்குமார், முகேஷ்குமார் ஆகியோர் தங்க காசுகளை பெற்றுக் கொண்டனர். மேலும் 20 பேருக்கு வெள்ளி காசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் வருகிற 17-ந்தேதி ராமேஸ்வரத்தில் நடைபெற இருக்கும் பி.எல்.ஏ.2 பயிற்சி பாசறை கூட்டத்தில் தகுதியான அனைவரும் தவறாமல் கலந்து கொள்வதென்று வலியுறுத்தப்பட்டது. விழாவில் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தெற்கு மாவட்ட துணை அமைப் பாளர் மகேஷ், 14-வது வார்டு கவுன்சிலர் நிர்மலா தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News