உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் 255 பேர் தகுதி

Published On 2022-09-13 05:42 GMT   |   Update On 2022-09-13 05:42 GMT
  • கடலூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் 255 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
  • அரசுப்பள்ளி மாணவர்களில் 64 பேர் அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியைப் பெற்றனர்.

கடலூர்:

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வை கட லூர் மாவட்டத்தைச் சேர்ந்த 532 மாணவ, மாணவிகள் எழுதினர்.இவர்களில், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் 266 பேர், அரசு மாதிரிப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் 65 பேர், அரசு உதவி பெறும் பள்ளி களைச் சேர்ந்தவர்கள் 21 பேர், மெட்ரிக், சுயநிதிப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் 180 பேர் ஆவார்கள். நீட் தேர்வு முடிவு அண்மையில் வெளியானது. இதில் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியான மதிப்பெண்களுக்கு அதிகமாக பெற்றவர்களின் பட்டியலை கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் வெளியிட்டது.

அதன்படி, அரசுப்பள்ளி மாணவர்களில் 64 பேர் அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதி யைப் பெற்றனர். மேலும், 12 பேர், இந்த ஒதுக்கீடு இல்லாமல் நேரடியாக விண்ணப்பிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர். இதேபோல, அரசு மாதிரிப் பள்ளியைச் சேர்ந்தவர்களில் 33 பேர் அரசின் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியைப் பெற்றுள்ள நிலையில், 4 பேர் நேரடியாக மட்டுமே விண்ணப்பிக்கும் தகுதியைப் பெற்றனர். அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த வர்களில் 10 பேரும், மெட்ரிக், சுயநிதிப் பள்ளிகளைச் சேர்ந்தவர்களில் 132 பேரும் விண்ணப்பிக்கும் தகுதியைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News