உள்ளூர் செய்திகள்

கோவை விமான நிலையத்தில் இருந்து 25 லட்சம் பயணிகள் பயணம்

Published On 2023-03-11 15:03 IST   |   Update On 2023-03-11 15:03:00 IST
  • விமான நிலையத்தில் இருந்து தினமும் 10 ஆயிரம் பேர் செல்கிறார்கள்
  • தினசரி 36 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது.

கோவை,

கோவை விமான நிலையத்தில் கடந்த ஓராண்டில் பயணிகள் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை பீளமேடு விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, பூனே, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று பரவலுக்கு முன், தினசரி 36 விமானங்கள் இயக்கப் பட்டுவந்தது. ஆண்டு தோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் கோவை விமான நிலையத்தை பயன்படுத்தி வந்தனர். ெகாரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. தற்போது மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

கொரோனா பரவலுக்கு பின் உள்நாட்டு விமான போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பிவிட்டது. வெளிநாட்டு பிரிவில் முன்பு ஷார்ஜாவுக்கு 1, சிங்கப்பூருக்கு 2, இலங்கைக்கு 1 வீதம் மொத்தம் 4 விமானங்கள் இயக்கப்பட்டன. தற்போது இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இயக்கப் பட்டுவந்த 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் 2 விமானங்கள் மட்டுமே சர்வதேச பிரிவில் இயக்கப்படுகின்றன.

தினமும் குறைந்தபட்சம் 7,500 பயணிகளும், பண்டிகை உள்ளிட்ட முக்கிய நாட்களில் தினமும் 10 ஆயிரம் பயணிகளும் விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2022 ஏப்ரல் முதல் தற்போது வரை, கோவை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது.

தொற்று பரவலுக்கு பின் விமான நிலையம் சகஜ நிலைக்கு திரும்பி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இருப்பி னும் அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கையால் இட நெருக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம். இதற்கு விமான நிலைய விரிவாக்க திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதே தீர்வாகும்.

நிலஆர்ஜித பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ளதால் விரைவில் தமிழக அரசு நிலங்களை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்ப டைக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது. நிலங்கள் ஒப்படைக்கப்பட்டால் ஓடு தள பாதை விரிவாக்கம், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து வளர்ச்சி நடவடிக்கைகளும் உடன டியாக தொடங்கும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News