உள்ளூர் செய்திகள்

திருமண விழாவுக்கு சென்ற பெண்ணிடம் 21 பவுன் தங்க நகை திருட்டு

Published On 2023-10-06 14:00 IST   |   Update On 2023-10-06 14:00:00 IST
  • ஓடும் பஸ்சில் மர்மநபர்கள் கைவரிசை
  • திருமணத்தின் போது அணிவதற்காக ஒரு பர்சில் வைத்திருந்த நகைகளை பறித்து சென்றனர்

கோவை,

கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரது மனைவி சகன் பீவி (54).

இவர் மேட்டுப்பாளையம் அடுத்த ஓடந்துறை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு சென்றார்.

இதற்காக இவர் கரும்புக்கடையில் இருந்து பஸ்சில் ரெயில் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து ரெயில் மூலம் மேட்டு ப்பாளையம் சென்றார்.

திருமணத்தின் போது அணிந்து கொள்வதற்காக ஒரு பர்சில் 21 பவுன் தங்க நகைகளை எடுத்து, தனது பேக்கில் வைத்து எடுத்து சென்றிருந்தார்.

வீட்டிற்கு சென்றதும் பையை திறந்து பார்த்தார். அப்போது, அதில் வைத்திருந்த நகை பர்சுடன் மாயமாகி இருந்தது.

இதனால் அதிர்ச்சியான அவர், உடனடியாக வீட்டிற்கு வந்தும் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, அவர் உக்கடம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

இவர் பஸ்சில் பயணித்த போது, யாரோ மர்மநபர்கள் நகையை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அந்த கோணத்தில் விசா ரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ள காட்சிகளை கைப்பற்றி, யாராவது சந்தேகத்திற்கிடமாக இவரது பெட்டியில் பயணித்துள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News