உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

மாஞ்சோலையில் இரவில் தங்கிய சுற்றுலா பயணிகளுக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம்

Published On 2022-06-04 09:54 GMT   |   Update On 2022-06-04 09:54 GMT
வனத்துறை அனுமதியின்றி மாஞ்சோலையில் இரவில் தங்கிய சுற்றுலா பயணிகளுக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
நெல்லை:

 அம்பை புலிகள் காப்பகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
 
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பை வனச்சரகத்திற்கு உட்பட்ட மாஞ்சாலை சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு வனத்துறை அனுமதி பெற்று சுற்றுலா பயணிகள் சென்று வருகிறார்கள். 

அவர்கள் காலை முதல் மாலைவரை மாஞ்சோலையை சுற்றிப்பார்க்க அனுமதி வழங்கப்படுவது வழக்கம். இரவு நேரங்களில் அங்கு தங்க அனுமதி கிடையாது என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  

கடந்த 28-ந் தேதி மாஞ்சோலைக்கு சென்ற சுற்றுலா பயணிகள் அனுமதியின்றி இரவில் அங்கு தங்கி மறுநாள் 29-ந் தேதி மாலை மாஞ்சோலை சோதனை சாவடிக்கு திரும்பி வந்தனர். 

இதைத்தொடர்ந்து அவர்களுக்கு காலதாமதமாக வந்த குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்து ரூ. 30 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News