உள்ளூர் செய்திகள்
அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் பா.ஜ.க.வில் இணைந்தார்
அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளரும் முனைவருமான தென்திருப்பேரையை சேர்ந்த சடகோபன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கொண்டார்.
தென்திருப்பேரை:
பா.ஜனதா மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் முன்னிலையில் திருச்செந்தூரில் நடைபெற்ற மகளிர் அணி பேரணியில் அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளரும் முனைவருமான தென்திருப்பேரையை சேர்ந்த சடகோபன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கொண்டார். சடகோபனை கேசவ விநாயகம் சால்வை அணிவித்து வரவேற்றார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்தராங்கதன், மாநில வர்த்தக பிரிவு தலைவர் ராஜாங்கண்ணன், மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் நெல்லையம்மாள், மாவட்ட துணை தலைவி ரேவதி, மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருக ஆதித்தன், மாவட்ட செயலாளர் கனல் ஆறுமுகம், மாவட்ட வணிக பிரிவு செயலாளர் வெங்கடேஷ், மாவட்ட பிரசார பிரிவு செயலாளர் குமரேசன், மாவட்ட அரசு தொடர்பு தலைவர் பாலசுப்பிரமணியன், ஆழ்வை ஒன்றிய பிரசார பிரிவு செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.