உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வருகிற 20-ந் தேதி ராணிப்பேட்டை புதிய கலெக்டர் அலுவலகத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

Published On 2022-06-01 10:24 GMT   |   Update On 2022-06-01 10:24 GMT
வருகிற 20-ந் தேதி ராணிப்பேட்டை புதிய கலெக்டர் அலுவலகத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
ராணிப்பேட்டை:

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை புரிந்து ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார். 

திறப்பு விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. இதனையொட்டி நாளை மறுநாள் 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளார்.

3-ந் தேதி காலை ‌9.30 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றுக் கொள்ளுதல், 10.30 மணிக்கு ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறுதல், 11.30 மணிக்கு வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறுதல், 

12.30 மணிக்கு சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறுதல், 1.30 மணிக்கு அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் கோரிக்கை மனுக்கள் பெறுதல், 

3.30 நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறுதல், 4.30 மணிக்கு காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறுதல் உள்ளிட்ட பணிகளில் அமைச்சர் ஆர்.காந்தி ஈடுபட உள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகள் மீது தீர்வு காண கோரிக்கை மனுக்களை வழங்கலாம்.இந்த தகவலை கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் தெரிவித்தார்.
Tags:    

Similar News