உள்ளூர் செய்திகள்
ஆப்பக்கூடல் பகுதியில் பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

பேரூராட்சிகள் ஆணையர் ஆய்வு

Published On 2022-06-01 15:53 IST   |   Update On 2022-06-01 15:53:00 IST
ஆப்பக்கூடல் பகுதியில் பேரூராட்சி பணிகளை ஆணையர் செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
ஆப்பக்கூடல்: 

ஆப்பக்கூடல் பகுதியில் பேரூராட்சி பணிகளை ஆணையர் செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பேரூராட்சியில் திட்டப்பணிகள் மற்றும் புதிய பணிகளை சென்னை மாநில பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ் ஆய்வு செய்தார்.  

தொடர்ந்து ஆப்பக்கூடல் பேரூராட்சியில் வளமீட்பு பூங்கா, குப்பைகளை உரம் தயாரித்தல் , மண்புழு உரம் தயாரித்தல், சமுதாய கழிப்பிடம் ஆகியவற்றை அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  

இதில் ஈரோடு மண்டல பேரூராட்சிகளில் உதவி இயக்குநர் சுந்தரமூர்த்தி, உதவி பொறியாளர் மோகன், கணேசன், பேரூ ராட்சி செயல் அலு வலர் ஹேமலதா, இள நிலை பொறியாளர் சோம சுந்தரம் மற்றும் அலுவலக பணியாளர்கள் பலர் கலந்த கொண்டனர்.
Tags:    

Similar News