உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தென்காசி மாவட்டத்தில் விவசாயி, தொழிலாளி தற்கொலை

Published On 2022-06-01 14:58 IST   |   Update On 2022-06-01 14:58:00 IST
தென்காசி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் விவசாயி, தொழிலாளி தற்கொலை செய்து கொண்டனர்.
தென்காசி :

ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலையை அடுத்த குறிஞ்சான்பட்டி வேதகோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணிய பாண்டியன்(53). விவசாயி.

சம்பவத்தன்று இவர் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவரது மனைவி சசிகலா(48), சற்று தாமதமாக சாப்பாடு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த சுப்பிரமணிய பாண்டியன் சாப்பிடாமல் வீட்டுக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.

இதற்கிடையே சசிகலா, வீட்டுக்கு செல்லாமல் மாலை வரை தோட்டத்தில் வேலை பார்த்துவிட்டு அதன்பின்னர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு சுப்பிரமணிய பாண்டியன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.  

உடனே அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது தொடர்பாக ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வாசுதேவநல்லூர் அருகே உள்ள வெள்ளானகோட்டையை சேர்ந்தவர் முருகன்(34). இவர் வைக்கோல் லோடு ஏற்றும் வேலைக்கு சென்று வந்தார்.

கடந்த சில நாட்களாக வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு பணம் கொடுக்க வில்லை என்று கூறி அவரது மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த முருகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
Tags:    

Similar News