உள்ளூர் செய்திகள்
போலீஸ் சூப்பிரண்டு

கஞ்சா விற்பனை செய்தால் வங்கி கணக்கு முடக்கம் - போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

Published On 2022-05-31 09:45 IST   |   Update On 2022-05-31 09:45:00 IST
வருங்காலங்களில் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்படும் என்று தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென்காசி:

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவின்பேரில் தென்காசி மாவட்டத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தியதில், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்ததாக 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களான கணவன், மனைவி, பெற்றோர் போன்றவர்களின் 28 வங்கி கணக்குகள் இதுவரை முடக்கம் செய்யப்பட்டு உள்ளது. வருங்காலங்களில் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News