உள்ளூர் செய்திகள்
ஷிபா மருத்துவமனையில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்ற காட்சி.

ஷிபா மருத்துவமனையில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2022-05-30 15:42 IST   |   Update On 2022-05-30 15:42:00 IST
உலக தைராய்டு தினத்தை முன்னிட்டு ஷிபா மருத்துவமனையில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
நெல்லை:

உலக தைராய்டு தினத்தை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள ஷிபா மருத்துவமனை சார்பில் தைராய்டு நோய்க்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமில் தைராய்டு சுரப்பி குறைபாடுகள், முன் கழுத்தில் வீக்கம் மற்றும் கட்டி, தைராய்டு புற்று நோய், உடல் பருமன் அல்லது மெலிதல், படபடப்பு, கை நடுக்கம், தூக்கமின்மை, ஒழுங்கற்ற மாதவிடாய், முடி கொட்டுதல், நகம் உடைதல் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது. 

முகாமில் 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தைராய்டு பரிசோதனைகளை எடுத்துக் கொண்டனர். 

முகாமில் தைராய்டு நோயியல் சிறப்பு மருத்துவர்கள் அருண் விஸ்வநாத், ராகேஷ் சந்துரு, ஸ்டேன்லி ஜேம்ஸ் ஆகியோர்  இலவச மருத்துவ ஆலோசனை வழங்கினர். 

சிறப்பு முகாமிற்கு ஷிபா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் முகம்மது ஷாபி அனைத்து ஒருங்கிணைப்புகளும் செய்திருந்தார்.

பரிசோதனையில் தைராய்டு அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு  முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் அதிநவீன முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் இந்த முகாமில்  ரூ.800 க்கு தைராய்டு நோய் கண்டறியும் பரிசோதனைகள் ரூ.300 க்கு செய்யப்பட்டது.
Tags:    

Similar News