உள்ளூர் செய்திகள்
குமாரபாளையம் பஸ் நிலையத்தில் தற்காலிகமாக இடமாற்றம் செயல்பட்ட மார்க்கெட்டை படத்தில் காணலாம்.

குமாரபாளையத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட தினசரி காய்கறி மார்க்கெட்

Published On 2022-05-30 15:27 IST   |   Update On 2022-05-30 15:27:00 IST
குமாரபாளையத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட தினசரி காய்கறி மார்க்கெட் கட்டப்பட உள்ளது.
குமாரபாளையம்:

குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் சேதமானதால், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ்  2 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பில் தினசரி காய்கறி மார்க்கெட்  கட்டப்பட உள்ளது. 

கட்டுமான பணிகள் முடியும் வரை தற்காலிகமாக மார்க்கெட் பஸ் ஸ்டாண்டில்  அமைக்க,  சேர்மன் விஜய்கண்ணன், நகராட்சி கமிஷனர், பொறியாளர் மற்றும் கவுன்சிலர்களால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மார்க்கெட் கடைகள் தற்காலிகமாக பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் அமைக்கப்பட்டது.

Tags:    

Similar News