உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பலி
திருவள்ளூர் அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளுர்:
சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (40). இவர் மப்பேடு பகுதியில் உள்ள சிங்கீஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கும்பாபிஷேக திருப்பணியில் ஈடுபட்டு வந்தார்.
இவர் கோவில் அருகே உள்ள குளத்தில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியானார். உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.