உள்ளூர் செய்திகள்
ஷாநவாஸ் எம்.எல்.ஏ.வுக்கு கட்சியினர் நினைவு பரிசு வழங்கல்

விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி

Published On 2022-05-29 15:33 IST   |   Update On 2022-05-29 15:33:00 IST
நாகை அருகே பனங்குடியில் விடுதலை சிறுத்தை கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சியில் ஷாநவாஸ் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
நாகப்பட்டினம்:

திருமருகல் ஒன்றியம் பனங்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் கதிர்நிலவன், மாவட்டத் துணைச் செயலாளர் பேரறிவாளன், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் ராஜேந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பேசினார். சன்னமங்கலம் கிளை நிர்வாகி முத்து வரவேற்றார். இதில் சன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்த 5 குடும்பத்தினர் மாற்று கட்சியில் இருந்து விலகி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ சால்வை அணிவித்தார். 

இதில் முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் முருகன், ஒன்றிய பொருளாளர் கணேசமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய துணைச் செயலாளர் நடராஜன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News