உள்ளூர் செய்திகள்
பஞ்சப்பள்ளி அருகே மதுவிற்ற 2 பேர் கைது
பஞ்சப்பள்ளி அருகே மதுவிற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த பஞ்சப்பள்ளி அருகே பாளையம் கிராமத்தில் அரசாங்க மதுபானத்தை பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அனுமதி யின்றி மதுவிற்றதாக கார்த்திகேயன் (வயது41), வேல்முருகன் ஆகிய இரு வரையும் போலீசார் கைது செய்தனர். கைதான அவர்களி டம் இருந்து மது பாட்டி ல்களையும பறி முதல் செய்யப்பட்டது.