உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி வாலிபர் பலி

Published On 2022-05-27 14:16 IST   |   Update On 2022-05-27 14:16:00 IST
மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
புதுக்கோட்டை:

ஆலங்குடி அருகே உள்ள வல்லத்திராக்கோட்டை கிராமத்தைச்சேர்ந்த வடிவேல் மகன் ரவிகுமார் (வயது 23). இவர் கடந்த சில தினங்களுக்கு மு ன்பு சொந்த வேலையாக இருசக்கர வாகனத்தில் வந்துவிட்டு, ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். 

வேங்கிடகுலம் சாலையில்  சென்று கொண்டிருந்த போது,  சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்கா தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ரவிகுமார் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆலங்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கீரமங்கலம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் (பொ) மற்றும் ஆலங்குடி சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News