உள்ளூர் செய்திகள்
ஜமாபந்தி நிகழ்ச்சி

ஜமாபந்தி நிகழ்ச்சி

Published On 2022-05-26 14:46 IST   |   Update On 2022-05-26 14:46:00 IST
ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை: 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவிலில் வருவாய் தீர்வாயம் பசலி எண் 1431ற்கான ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் வெள்ளைச்சாமி ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் சொர்ணராஜ் தலைமை வகித்தார்.  

கூட்டத்தில் பொன்பேத்தி சரகத்திற்குட்பட்ட கிராம கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு, முடித்து வைக்கப்பட்டது. பின்பு பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்வு நடைபெற்றது. 

நேற்று பொன்பேத்தி சரகத்திற்குட்பட்ட கிராம கணக்குகள் முடிக்கப்பட்ட நிலையில், வரும்27 மற்றும் 31 ஆகிய தேதிகளில் முறையே மீமிசல், ஏம்பல், ஆவுடையார்கோவில் ஆகிய சரகங்களில் உள்ள கிராம கணக்குகள் முடிக்கப்படவுள்ளது. 

 31-ந் தேதி அன்று மாலை குடிகள் மாநாடும் நடைபெறவுள்ளது.நிகழ்ச்சியில் தனி வட்டாட்சியர் வில்லியம்மோசஸ், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் மார்டின்லூதர்கிங், 

வேளாண்மை துறை உதவி இயக்குனர், துணை வட்டாட்சியர்கள், தோட்டக்கலை மற்றும் புள்ளியல்த்துறை அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள், நில அளவைத் துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News