உள்ளூர் செய்திகள்
நகர் மன்றக் கூட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.

நகர் மன்றக் கூட்டம்

Published On 2022-05-26 14:44 IST   |   Update On 2022-05-26 14:44:00 IST
நகர் மன்றக் கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை நகர்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் திலகவதி தலைமை வகித்தார். நகர்மன்ற துணைத் தலைவர் லியாகத்அலி, ஆணையர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் தலைவர் திலகவதி பேசும்போது, புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 242 புதிதாக மின்விளக்குகளும், 1034 தெருவிளக்குகள் பராமரிக்கப்பட்டுள்ளது. மேலும் நகராட்சி பகுதிக்கு குடிதண்ணீர் வினியோகிக்க அம்மையாப்பட்டியில் கூடுதல் போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

நகராட்சிக்குட்பட்ட 7 இடங்களில் புதிதாக போர்வெல் அமைக்கப்படவுள்ளது. 3 இடங்களில் பொதுகழிப்பிடம் மற்றும் சமுதாய கழிப்பிடம் கட்டபடவுள்ளது என தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள குறைகளை தெரிவித்து அதனை உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறு கேட்டுக்கொண்டனர்.

Tags:    

Similar News