உள்ளூர் செய்திகள்
தீர்மானம்

புதிய பஸ் நிலையத்தை திட்டமிட்ட இடத்தில் அமைக்க வேண்டும்

Published On 2022-05-26 08:10 GMT   |   Update On 2022-05-26 08:10 GMT
இளையன்குடியில் புதிய பஸ் நிலையத்தை திட்டமிட்ட இடத்தில் அமைக்க வேண்டும் என ஆதரவாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சி யில் புதிய பஸ்நிலையம் அமைக்க சிவகங்கை ரோட்டில் கடந்த மார்ச் மாதம் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் அடிக்கல் நாட்டினார். நகருக்கு வெளியே அமைப்பதாக பஸ்நிலைய எதிர்ப்பு  குழுவினர் பஸ்நிலையம்  அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்த நிலையில் அரசு சார்பில் கருத்துக்கள் கேட்கப்பட்டது. புதிய பஸ்நிலைய ஆதரவாளர்கள் குழு கூட்டம் தி.மு.க. நகர செயலாளர் நஜீமுதின் தலைமையில் நடைபெற்றது. இதில் திட்டமிட்ட இடத்தில் நவீன வசதிகளுடன் புதிய பஸ்நிலையம் அமைக்க வேண்டும். இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். 


தற்போது உள்ள பஸ் நிலையமும் தொடர்ந்து 5 ஆண்டுகள் பயன்பாட்டில் இருக்கும். தற்போது உள்ள பஸ்நிலையத்தில் இருந்து புதிதாக அமைக்க உள்ள பஸ் நிலையத்தில் இருந்து நேரடி பஸ்களும் மகளிர் கட்டணம் இல்லாத பஸ்களும் அதிக அளவில் இயக்க வேண்டும் என புதிய பஸ்நிலைய ஆதரவாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்ய பட்டு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
Tags:    

Similar News