உள்ளூர் செய்திகள்
தென்காசி ஆர்.டி.ஓ. கங்காதேவி மற்றும் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ராஜேந்திரன் பேரணியை தொடங்கி வைத்த காட்சி.

செங்கோட்டை அருகே விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

Published On 2022-05-25 09:39 GMT   |   Update On 2022-05-25 09:39 GMT
செங்கோட்டை அருகே சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் பொருட்டு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
செங்கோட்டை:

செங்கோட்டை அருகே  உள்ள சீவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி முன்பு இருந்து சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் பொருட்டு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. பேரணிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் கனகம்மாள் முன்னிலை வகித்தார்.

தென்காசி ஆர்.டி.ஓ. கங்காதேவி மற்றும் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ராஜேந்திரன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர். தி.மு.க. சுற்றுச்சூழல் அணியின் தலைவர் சரவணன் மூலிகை மரக்கன்றுகளை பரிசாக வழங்கினார்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் பற்றி துணை வேளாண்மை அலுவலர் ஷேக் முகைதீன் உரையாற்றினார். உள்ளூர் முக்கிய பிரமுகர்கள், விவசாயிகள், பசுமைஇலத்தூர் மற்றும் பசுமைவலசை ஆர்வலர்கள் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

 மாசு இல்லாத வாகனத்தின் சிறப்பை எடுத்துரைக்கும் பொருட்டு கழுநீர்குளம் கிராமத்தை சேர்ந்த சிறுமி அப்னதஸ்ஸின், சிறுவன் ரெஸ்மான்செய்ன் பேட்டரியால் இயங்கும் ஜீப் மற்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டி சுற்றுச்சூழலின் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணி இலத்தூர் லட்சுமிஅரிகரா உயர்நிலைப்பள்ளியில் நிறைவுபெற்றது.
Tags:    

Similar News