உள்ளூர் செய்திகள்
ஆலங்குடியில் சாலை விபத்தில் பெண் பலி
ஆலங்குடி அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில் பெண் பலியானார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள சிக்கப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி தனபாக்கியம் ( வயது 55). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர் இன்று அதிகாலை ஆலங்குடி வடகாடு பிரதான சாலையில் குடிநீர் பிடித்து குடத்தை தூக்கிக்கொண்டு சாலையோரம் சென்ற போது
அந்த சாலை வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாரத விதமாக தனபாக்கியம் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இது குறித்து வடகாடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.