உள்ளூர் செய்திகள்
ஏ.டி.எம். எந்திரத்தை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. திறந்து வைத்த காட்சி.

நெல்லை மத்திய கூட்டுறவு வங்கியில் புதிய ஏ.டி.எம்.- அப்துல் வகாப் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

Published On 2022-05-25 09:29 GMT   |   Update On 2022-05-25 09:29 GMT
நெல்லை மத்திய கூட்டுறவு வங்கியில் புதிய ஏ.டி.எம் எந்திரத்தை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
நெல்லை:

நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் புதிதாக ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இதில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஏ.டி.எம். மையத்தை திறந்து வைத்தார்.

விழாவில் மேயர் சரவணன், தொ.மு.ச. அமைப்பு செயலாளர் தர்மர், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சுபாஷினி, மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் செல்லப் பாண்டியன்,

நெல்லை மத்திய கூட்டுறவு வங்கி துணை பதிவாளர் லட்சுமண குமார், சரக மேற்பார்வையாளர் காதர் மைதீன், 11-வது வார்டு கவுன்சிலர் கந்தன், பேட்டை ரூரல் பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை, வார்டு உறுப்பினர்கள் முருகன், ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News