உள்ளூர் செய்திகள்
filephoto

கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தீர்த்த உற்சவம்

Published On 2022-05-25 14:54 IST   |   Update On 2022-05-25 14:54:00 IST
கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தீர்த்த உற்சவம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
 
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றான கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில்  திருவிழா  மே. 15-ம் தேதி காப்புக்கட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து, மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,அம்மன் வீதியுலாவும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றுவந்தன.  திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்  நடைபெற்றது. 

இதைத்தொடர்ந்து,   தீர்த்த உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காலை முதல் மாமன் ன், மைத்துனர் உறவின்முறைகாரர்கள் மீது மஞ்சள் நீர் ஊற்றி விளையாடினர். 

தொடர்ந்து, கோயிலில் அம்மனுக்கு மஞ்சள் நீரால் சிறப்பு அபிஷேக ஆ ராதனைகள் நடைபெற்றன. பின்னர்,அம்மனை  வாகனத்தில் எழுந்தருளச்செய்து, தேரோடும்  வீதிகள் வழியே பக்தர்கள் வாகனத்தை இழுத்து வந்தனர். அப்போது, அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மீது மஞ்சள் தீர்த்தம் தெளிக்கப்பட்டன.

Tags:    

Similar News