உள்ளூர் செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கிண்டியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

Published On 2022-05-25 13:57 IST   |   Update On 2022-05-25 13:57:00 IST
கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரெனறு ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை ராணி மேரி கல்லூரியில் நடந்த இளைஞர் திறன் திருவிழாவில் கலந்து கொண்டார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்ட அவர் கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரெனறு ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணியாற்றும் ஊழியர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார். பின்னர் அலுவலகம் முழுவதையும் அவர் பார்வையிட்டார்.

Tags:    

Similar News