உள்ளூர் செய்திகள்
பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகைக்கான மனுவை பெற்று மாவட்ட கலெக்டர் அரவிந்த் விசாரணை நடத்திய போது எடுத்த

தக்கலையில் ஜமாபந்தி : கலெக்டர் ஆய்வு

Published On 2022-05-24 18:36 IST   |   Update On 2022-05-24 18:36:00 IST
தக்கலையில் ஜமா பந்தி நிகழ்ச்சியில் வருவாய் தீர்வாயம் சம்பந்தமான நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தக்கலை, கல்குளம், கோதநல்லூர், வேலி மலை, முத்தனக் குறிச்சி, சடையமங்கலம், குமாரபுரம், பத்மநாபபுரம் உள்ளிட்ட 9 கிராம கணக்குகளை ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி:

தக்கலையில் ஜமா பந்தி நிகழ்ச்சியில் வருவாய் தீர்வாயம் சம்பந்தமான நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கல்குளம் தாலுகாவிற்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் வருகை தந்து தக்கலை, கல்குளம், கோதநல்லூர், வேலி மலை, முத்தனக் குறிச்சி, சடையமங்கலம், குமாரபுரம், பத்மநாபபுரம் உள்ளிட்ட 9 கிராம கணக்குகளை ஆய்வு செய்தார். 

மேலும், பொதுமக்களிடம் இருந்து விதவை பென்சன், முதியோர் உதவித்தொகை, சாலை-குடிநீர் சீரமைப்பு போன்ற கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இதற்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தக்கலை தாசில்தார் வினோத், தக்கலை கிராம நிர்வாக அதிகாரி மது, முத்தலக்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி சுந்தர் ராஜ், பத்மநாபபுரம் கிராம நிர்வாக அதிகாரி கிருஷ்ணன் ஆகிய 9 கிராம நிர்வாக அதிகாரிகளும் வட்ட சார் ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியானது வரும் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.
Tags:    

Similar News