உள்ளூர் செய்திகள்
அபராதம்

சங்கராபுரம் அருகே பொது இடங்களில் புகைப்பிடித்தவர்களுக்கு சுகாதாரத்துறை அபராதம்

Published On 2022-05-18 11:06 GMT   |   Update On 2022-05-18 11:06 GMT
புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்படும் தீமைகளும், மற்றும் புகைப்பிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும் எடுத்து கூறி சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு செய்தனர்.
சங்கராபுரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரிஷிவந்தியம் வட்டார மருத்துவ அலுவலர் தீபிகா மேற்பார்வையில் அத்தியூர் சந்தை மேட்டில் சுகாதார துறை சார்பில் பொது இடங்களில் புகைப்பிடித்தல், பான்மசாலா, பான்பரான், ஹான்ஸ் மற்றும் உடம்புக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய புகையிலை போடுபவர்களை சுகாதாரத்துறையினர் நேரில் எச்சரிக்கை செய்து, அபாராதம் விதித்தனர்.

மேலும் புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்படும் தீமைகளும், மற்றும் புகைப்பிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும் எடுத்து கூறி விழிப்புணர்வு செய்தனர்.

நிகழ்ச்சியில் சுகாதார மேற்பார்வையாளர் (பொறுப்பு) தெய்வீகன், ஆய்வாளர்கள் குமாராசாமி, பிரசாந்த், வேல், ஜெகதீஷ், மற்றும் அரியலூர் பன்னீர், மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News