உள்ளூர் செய்திகள்
மணல்

திட்டக்குடி அருகே வெள்ளாற்றில் சாக்கு மூட்டையில் கட்டி மணல் கொள்ளை

Published On 2022-05-18 10:30 GMT   |   Update On 2022-05-18 10:30 GMT
தொடர் மணல் கொள்ளையில் ஈடுபடும் கும்பல் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திட்டக்குடி:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பெரங்கியம் கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் அனுமதி இன்றி இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மாட்டு வண்டி மற்றும் டிராக்டர் டிப்பர்களில் மணல் கடத்தல் நடக்கிறது.

மேலும் பட்டப்பகலில் சாக்கு மூட்டையில் கட்டி மணல் கடத்தும் கும்பல் செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் பல முறை புகார் தெரிவிக்கிறார்கள்.

மணல் கடத்துவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.

இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் அப்பகுதி ஆய்வுசெய்து தொடர் மணல் கொள்ளையில் ஈடுபடும் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News