உள்ளூர் செய்திகள்
கடலூர் பகுதியில் பெய்த திடீர் மழை

கடலூர் நகர் பகுதியில் பெய்த திடீர் மழை

Published On 2022-05-18 15:51 IST   |   Update On 2022-05-18 15:51:00 IST
கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்முடா, சுப உப்பலவாடி ஆகிய மீனவ கிராமங்களில் கடல் சீற்றம் காரணமாக 30 அடிக்கு முன்னோக்கி கடல் அலை சீறிப்பாய்ந்து சென்று வந்தன.
கடலூர்:

கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அசானி புயல் உருவாகி கரை கடந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது.

கடந்த 2 நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இதற்கிடையில் கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்முடா, சுப உப்பலவாடி ஆகிய மீனவ கிராமங்களில் கடல் சீற்றம் காரணமாக 30 அடிக்கு முன்னோக்கி கடல் அலை சீறிப்பாய்ந்து சென்று வந்தன.

இந்த நிலையில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டுள்ள நிலையில், இன்று மதியம் 12 மணியளவில் திடீரென்று மழை பெய்து வந்தது. இதன் காரணமாக குளிர்ந்து காற்று வீசி வந்த நிலையில் சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் பலர் நனைந்தபடியும், சிலர் குடைப்பிடித்தபடியும் சென்றது காண முடிந்தது.

Similar News