உள்ளூர் செய்திகள்
நீலகிரியில் மழையால் கேரட் விளைச்சல் பாதிப்பு
கேரட் அழுகி, அடிபட்டு சரியான விளைச்சல் கிடைக்காததால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
அரவேணு:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் கேரட் உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டு உள்ளன. தற்போது அங்கு நல்ல மழை பெய்து வருவதால் கேரட் மற்றும் காய்கறி பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளது.
இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். கேரட் அழுகி, அடிபட்டு சரியான விளைச்சல் கிடைக்காததால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் பராமரிப்பு செலவுக்கு கூட பணம் மிஞ்சவில்லை என வேதனை தெரிவித்தனர்.